Monday, 13 January 2014


புத்தாண்டு வந்தாச்சு...

புரண்டு போன காலத்தை
புரட்டிப்பார்த்தாச்சு
அது போதும்
புத்தாண்டு வந்தாச்சு...

நம்பிக்கை நன்னடத்தை
நங்கூரமாக்கி நகர்ந்து கொண்டு இரு
அது போதும்
புத்தாண்டு வந்தாச்சு...

எதிர்காலம், நிகழ்காலத்தை
கடந்தகாலமாக்காது காத்துக்கொண்டு இரு
அது போதும்
புத்தாண்டு வந்தாச்சு...

சாந்தம், சகிப்பதை
சாதனமாக்கி (குளிர் சாதனகமாக்கி) கொண்டு இரு
அது போதும்
புத்தாண்டு வந்தாச்சு...

எல்லாமே நன்மைக்கதை
எண்ணமாக்கி எட்டு வைத்துக்கொண்டு இரு
அது போதும்
புத்தாண்டு வந்தாச்சு...

தவறுகள் தவறியுமதை
தராமல் தவிர்த்துக்கொண்டு இரு
அது போதும்
புத்தாண்டு வந்தாச்சு...

பணிவு பண்பதை
பரிசளித்து பறை சாற்றிக்கொண்டு இரு
அது போதும்
புத்தாண்டு வந்தாச்சு...

விவேகம், விசேசமதை (மனிதம்)
விருப்பமாயேற்று வீறு நடை கொண்டு இரு
அது போதும்
புத்தாண்டு வந்தாச்சு...

முயற்சியெனும் முன்படியதை
முழுமையாய் ஏற்றுக்கொண்டு இரு
அது போதும்
புத்தாண்டு வந்தாச்சு...

வாழ்க்கையென்னும் வாசனைப்பூவதை
வாஞ்சையுடன் விட்டுக்கொடுத்து வளர்த்துக்கொண்டு இரு
அது போதும்
புத்தாண்டு வந்தாச்சு...

எடைபோட்ட எதிர்காலத்தை
எண்ணி எதையும் ஏற்கும் மனதுடன் ஏணிப்படி ஏறிக்கொண்டு இரு
அது போதும்
புத்தாண்டு வந்தாச்சு...
பொறுமையிலும் பொறுமையதை
பொறுத்து பொலிவு கொண்டு இரு
அது போதும்
புத்தாண்டு வந்தாச்சு...

எதிர்பார்ப்பு ஏமாற்றமதை
எட்டித்தள்ளி ஏறு நடை போட்டுக்கொண்டு இரு
அது போதும்
புத்தாண்டு வந்தாச்சு...

கடமை கண்ணியமதை
கட்டுப்பட்டுடன் காத்துக்கொண்டு இரு
அது போதும்
புத்தாண்டு வந்தாச்சு...

வாழ்க்கைத்தோட்டத்து உறவுப்பூவதை
வசமாக்க மனித நேயம் கொண்டு இரு
அது போதும்
புத்தாண்டு வந்தாச்சு...


புத்தாண்டு வந்தாச்சு...
புதுப்பொலிவு வந்தாச்சு...
புதுவாழ்வு வந்தாச்சு!

Wednesday, 1 January 2014

பொங்கட்டும் பொங்கல். பொங்கலோ பொங்கல்!



பொங்கட்டும் பொங்கல்.
பொங்கலோ பொங்கல்!

பழையன கழியட்டும்.
பகை எல்லம் விழகட்டும்.
புதியன புகுரட்டும்.
புவியெங்கும் பூமணம் கமழட்டும்.
பொங்கட்டும் பொங்கல்.
பொங்கலோ பொங்கல்!

தைமாதம் தான் பிறந்து தடைகளெல்லாம் தளரட்டும்.
தரணியெங்கும் தமிழன் தலை உயரட்டும்.
உழன்று வாழும் உழவனது உன்னதம் உயரட்டும்.
பெயரளவான வார்தைகளெல்லாம் செயல்களாகட்டும்.
பொங்கட்டும் பொங்கல்.
பொங்கலோ பொங்கல்!


நற்காலைப் பொழுதினிலே நன்நீராடிச்
பொங்கல் விழா தனிப்பெருந்
திருவிழாக்கோலம் பூண்டு.
தைப்பொங்கல் திருவிழா 
தமிழரின் பண்பாட்டினை பறைசாற்ற 
பொங்கட்டும் பொங்கல்.
பொங்கலோ பொங்கல்!

அதிகாலை கதிரவனின் வருகை வரவேற்று
இல்லத்தின் முற்றத்தில் வண்ணக்கோலமிட்டு
பசுஞ்சாணம் கொண்டு அறுகம்புல்லில் பிள்ளையாரும் பிடித்து
கிழக்கே பார்க்க குத்துவிளக்கும் ஏற்றி
வாயில் கூரையில் கூரைப்பூச்சூடி
வெத்திலையும் பாக்கும் சந்தனமும் ஊதிபக்தியும்,
சாம்பிராணியும் ஊரெங்கும் மணக்கட்டும்
கரும்பும் வாழைப்பழங்களும்
இனிப்பு பலகாரமும் பக்கம் இருக்க...
அவரை, கத்திரி, வாழை, பலா பரங்கியென
ஐவகைக் கறிகாய் சமைச்சு!
விவசாயத்திற்கும் உழவர்க்கும்
நல்வாழ்வு தரும் நிலத்திற்கும்
உயிர்தரும் நீருக்கும்
மூச்சுதரும் காற்றுக்கும்
ஒளிதரும் சூரியனுக்கும்
மழைதரும் ஆகாயத்திற்கும் 
ஆயுள் வளர்க்கும் ஐம்பூதங்களுக்கும்
நன்றியோடு விழா தொடுத்து
வாய்க்கால் வரப்புகளில் விளையாடி
வயலுக்குள்ளும் வாழத்தோப்புக்குள்ளும் வாழ்ந்து
வானம் பார்த்து வளர்ந்த நெற்கதிர்களை வணங்கி 
உயர்ந்த உன்னத மனிதன், 
உயிர்வளர்க்க உணவளித்த
உழவனை வணங்கி தொழுது....
பொன் நாள் அது மேன் மேலும் பெருக....
பொங்கட்டும் பொங்கல்.
பொங்கலோ பொங்கல்!

புத்தம்புதுப் பானையில் மஞ்சளிட்டு
பச்சரிசி, பாலும் சர்க்கரையும் பசு நெய்யுமிட்டு
பாகும் பருப்புமிட்டுப் பொங்கி
மஞ்சளும் இஞ்சியும்
கரும்பும் கற்கண்டும் பாங்காயிட்டு
நான்நிலத்தை முத்தமிட்டு
நாயகன் சூரியன் அவனை வாழ்த்திட்டு
உழவர்தம் உயிர் நெகிழும்
பொங்கல்நாளில்.
பொங்கட்டும் பொங்கல்.
பொங்கலோ பொங்கல்!
விடியலை கொடுக்கும்
அவலங்கள் அகலும்- என்ற
நம்பிக்கையில்
அன்பர் அனைவரும் ஒன்று கூடி
கொடுத்துப்பரிமாறி குதுகளித்திருக்க
மகிழ்ச்சிவெள்ளத்தில் மகிழ்ந்த திருநாள் நிலைத்திருக்க.
பொங்கட்டும் பொங்கல்.
பொங்கலோ பொங்கல்!

நிலையற்ற வாழ்வால் நித்தமும் பொங்கல் முற்றத்தில் 
நிலையாகும் நிலை மாற..
தமிழினத்தின் நிலை கண்டு தரணியில் பொங்கட்டும் பொங்கல்.
பண்பை பறைசாற்றித் திளைக்கட்டும் பாரம்பரியப்பொங்கல்!
மண்ணில், மலரட்டும் மனித நேயப்பொங்கல்!
பொங்கட்டும் பொங்கல்.
பொங்கலோ பொங்கல்!



Friday, 1 November 2013

தீபாவளி வந்தாச்சு!!!


தீப ஒளி திரு நாளில்...
தீமை அகற்றும் கங்கை நீராடி...
தினுசு தினுசாய் ஆடை உடுத்தி...
திசையெல்லம் தீபமேற்றி...
தித்திக்கும் இனிப்பு உண்டு...
திக்கெங்கும் பட்டாசு கொளுத்தி...

தீர்கமாய் ஒரு குரல்!

திருமகள் வந்துருக்கேன்..
தீபாவளி காசு கொடு!

திக்கற்று நிற்பவரும்
திசை மாறி திரிபவரும்
இருக்கும் மட்டும்...

தீமை- அவன் அழியவில்லை!

தீர்மானம் எடுத்து...
தினம் தினம் இல்லாவிடினும்
திரு நாட்களெல்லாம்...
தீயாய் பரவும் வறுமை போக்க...

தினையளவு தந்தேனும்...
திக்கற்றவர் வாழ்வில் தீப ஒளி எற்ற...
திசைமாறி திரிபவரும் திளைத்திருகப்பது திண்ணம்!

ம்ம்ம்...
திருமகள் வந்துருக்கேன்..
தீபாவளி வந்தாச்சு!!!

Wednesday, 30 October 2013

பண்டிகை நாள்!!!



 
பகலவன் படை எடுக்கும் முன்னே
பாவம் போக்கும் கங்கை நீராடி
பள பளக்கும் பட்டாடை உடுத்தி
பலகாரம் பல உண்டு
பட்டாசு தான் வெடித்து பகட்டாய்
பவனி வருவதில், இல்லை
பண்டிகை நாள்.
 
பசித்திருப்பவருக்கும்
பரிதவித்திருப்பவருக்கும்
பரிகாசம் சிறிதுமின்றி
பாசாங்கு துளியுமின்றி 
பகிர்ந்து கொடுப்பதிலிருக்கு
பண்டிகை நாள்!!!.
 
பாரினில் உள்ள பலருக்கும் 
பகிந்தளிக்கும் பண்பை 
பகவானும் பாரட்டும் நாள் - எதுவோ

அதுவே பண்டிகை நாள்!!!!

எனக்கு பிடித்த பாரதியும், நானும்...(4)


பெண் விடுதலை...

பெண்ணுக்கு விடுதலையென் றிங்கோர் நீதி
பிறப்பித்தேன்;அதற்குரிய வெற்றி கேளீர்;
மண்ணுக்குள் எவ்வுயிரும் தெய்வ மென்றால்
மனையாளும் தெய்வமன்றோ? மதிகெட் டீரே!
விண்ணுக்குப் பறப்பதுபோல் கதைகள் சொல்வீர்
விடுதலையென் பீர்,கருணை வெள்ள மென்பீர்,
பெண்ணுக்கு விடுதலைநீ ரில்லை யென்றால்
பின்னிந்த உலகினிலே வாழ்க்கை யில்லை.

- மகா கவி பாரதி

பெண் விடுதலை...

பெண்ணுக்கு விடுதலையென் றிங்கோர் சதி
பிறப்பித்த நாள் முதல்;அதற்குரிய சேதி கேளீர்;
மனிதனை ஈன்றவள் தெய்வ மென்றால்
மகளிர் யாவரும் தெய்வமன்றோ? சதிசெய் தீரே!
கண்ணுக்கு முன்னே கதறும் பெண்னை 
காப்பாற்ற கதியின்றி கதைகள் சொல்வீர்
விட்டில்பூச்சியென்பீர் ,காட்சி பொருள் என்பீர்,
பெண்ணுக்கு விடுதலை இனி இல்லை யென்றால்
இனி இந்த உலகினிலே வளர்ச்சியும் இல்லை, வளமும் இல்லை.

-வளர் கவி சௌமி

Friday, 11 October 2013

எனக்கு பிடித்த பாரதியும், நானும்...(3)

நித்த நித்தம்
துயின்றெழுந்து
புத்தியற்ற புல்லருடன் பேசி
அத்தமித்த உடன் விழு பணத்தை
கல்லை மண்ணை
தொழுகவோ யான் பிறந்தேன்?

-மகாகவி பாரதியார்
_______________________________________

கத்தி இன்றி இரத்தம் இன்றி
யுத்தம் செய்த
காந்தி பிறந்த நாட்டிலே
யுத்த சத்தம் நித்தம் நித்தம்
துயிலெழுப்பும் கூட்டிலே
அர்த்தமில்லா வாழ்க்கைக்காய்
வாடுவதற்கோ

நான் பிறந்தேன்?
 - வளர் கவி சௌமியா

எனக்கு பிடித்த பாரதியும், நானும்......(2)

நடிப்புச் சுதேசிகள் பழித்தறிவுறுத்தல்
கிளிக் கண்ணிகள்

நெஞ்சில் உரமு மின்றி நேர்மைத் திறமு மின்றி, 
வஞ்சனை சொல்வா ரடீ!-கிளியே!
வாய்ச் சொல்லில் வீர ரடீ

கூட்டத்திற் கூடிநின்று கூவிப் பிதற்ற லன்றி,
நாட்டித்திற் கொள்ளா ரடீ!-கிளியே!
நாளில் மறப்பா ரடீ!
  
சொந்த அரசும் புவிச் சுகங்களும் மாண்பு களும்
அந்தகர்க் குண்டாகுமோ!-கிளியே
அலிகளுக் கின்ப முண்டோ?
  
கண்கள் இரண்டி ருந்தும் காணுந் திறமை யற்ற
பெண்களின் கூட்ட மடி!-கிளியே!
பேசிப் பயனென் னடீ!

 யந்திர சாலை யென்பர் எங்கள் துணிக ளென்பர்
மந்திரத் தாலே யெங்கும்-கிளியே!
மாங்கனி வீழ்வதுண் டோ?


உப்பென்றும் சீனி என்றும் உள் நாட்டுச் சேலை என்றும்
செப்பித் திரிவா ரடீ!-கிளியே!
செய் தறியா ரடீ!
  
தேவியர் மானம் என்றும் தெய்வத்தின் பக்தி என்றும்
நாவினாற் சொல்வ தல்லால்!-கிளியே
நம்புத லற்றா ரடீ!

 மாதரைக் கற்பழித்து வன்கண்மை பிறர் செய்யப்
பேதைகள் போலுயி ரைக்-கிளியே
பேணி யிரந்தா ரடீ!
  
தேவி கோயிலிற் சென்று தீமை பிறர்கள் செய்ய
ஆவி பெரிதென் றெண்ணிக்!-கிளியே!
அஞ்சிக் கிடந்தா ரடீ!

அச்சமும் பேடி மையும் அடிமைச் சிறும தியும்
உச்சத்திற் கொண்டா ரடீ!-கிளியே!
ஊமைச் சனங்க ளடீ!

ஊக்கமும் உள்வலியும் உண்மையிற் பற்று மில்லா
மாக்களுக் கோர் கணமும்-கிளியே!
வாழத் தகுதி யுண்டோ?


மானம் கிறிதென் றெண்ணி வாழ்வு பெரிதென்றெண்ணும்
ஈனர்க் குலகந் தனில்-கிளியே!
இருக்க நிலைமை யுண்டோ?
  
சிந்தையிற் கள் விரும்பிச் சிவசிவ என்பது போல்,
வந்தே மாதர மென்பார்!-கிளியே!
மனதி லதனைக் கொள்ளார்

பழமை பழமை யென்று பாவனை பேச லன்றிப்
பழமை இருந்த நிலை!-கிளியே!
பாமர ரேதறி வார்!

நாட்டில் அவ மதிப்பும் நாணின்றி இழி செல்வத்
தேட்டில் விரப்புங் கொண்டே!-கிளியே!
சிறுமை யடைவா ரடீ!

சொந்தச் சகோ தரர்கள் துன்பத்திற் சாதல் கண்டும்,
சிந்தை இரங்கா ரடீ-கிளியே!
செம்மை மறந்தா ரடீ!
  
பஞ்சத்தும் நோய்க ளிலும் பாரதர் புழுக்கள் போல்
துஞ்சத்தம் கண்ணாற் கண்டும்!-கிளியே!
சோம்பிக் கிடப்பா ரடீ!
  
தாயைக் கொல்லும் பஞ்சத்தைக் தடுக்க முயற்சி யுறார்
வாயைத் திறந்து சும்மா!-கிளியே!
வந்தே மாதர மென்பார்!

-மகாகவி பாரதியார்
  ___________________________________________________________________________________
 நடிப்புச் சுதேசிகள் பழித்தறிவுறுத்தல் …

மனதில் மாசுடனும் உண்மை உணர்வின்றியும்
தீவினை செய்வாரடீ - சகியே!
வாய்மை... வாக்கில் இல்லையடி!

பெண் மனம் பெண் அறியும்
பேச்சுக்கு இடம் இன்றி - சகியே!
பொன்னில் மனம் கொண்டாரடி!
பேசிப்பயன் என்னடி!

நாகரீக மேடையிலே நாணமும் நயமும் இன்றி
நாகரீக நடை போடுவர் - சகியே!
பார்வை கோளாரடி! பாதி பாழ் சிந்தை வேசமடி!
உலகம் யந்திர மோகமடி! எங்கும் சோகமடி!

உரிமைக்குரல் கொண்டும், வலிமை திறம் கொண்டும்
உயரே பறக்காமல் - சகியே!
ஊர்க்குருவி பருந்தாகாதாமடி!
சனங்கள் ஊமையானரடி!

மானம் மதி கெட்டு வாழும் வழி கெட்டு
மாசில் மடிந்தாரடி - சகியே!
மனத்தில் வெருமை பொங்குதடி!

பழமை புதுமை என்று பாவனை செய்து கொண்டு
பண்பை இழந்தாரடி - சகியே!
பாழும்… கிணற்றில் விழுந்தாரடி!

நாட்டில் நயவஞ்சகமும், நாணயமும் நகைத்தாட
நாளும் நரித்தன நடைபோட்டி - சகியே!
நலிந்தது... நம் வாழ்க்கையடி!

சகோதர சனம் வாழ்க்கை சடலமாய் விரிந்தாலும்
சத்தமே இல்லையடி - சகியே!
சகலமும் கொள்ளையடி!

பஞ்சமும் பரிதவிப்பும் பரிசாய் கிடைத்ததடி
பாவமும் பெருகுதடி - சகியே!
பாரதம் மழுங்குதடி!

“அன்னை இல்லம்” பெயருண்டு அதிலே
அன்னைக்கு ஒரு இடமும் இல்லையடி - சகியே!
அனாதை குலம்தானடி!

வஞ்சகர் வசை பாட வார்த்தைகள் வசம் இல்லை
வாடிதுடிக்கின்றேனடி -சகியே!
வாழும் ம(மா)க்கள் வந்தேமதரம் என்பாரடி!
வருந்த மாட்டாரடி!

திருந்தமாட்டாராடி சகியே! திருந்தி திளைப்பாரடி!

விரைவில் திருந்தி திளைப்பாரடி!

 - வளர் கவி சௌமியா