கணேச சரணம்!
மோதகம், அப்பம், அவல்,
பொரிகடலை, கரும்பு, சுண்டல்,
சுகியன், பிட்டு, தேன், தினை மாவு,
பால், பாகு, கற்கண்டு, சர்க்கரைப் பொங்கல்,
பாயசம், முக்கனிகள், விளாம்பழம், நாவற்பழம்,
எள்ளுருண்டை, வடை, அதிரசம்
சுண்டெலியும் சுரத்து அற்று போய்
கம்ப்யுட்டரும் கைப்பேசியும், கணேசர் கையில்…
அரச மர வினாயகன்...
தெருவோரங்களை மடக்கி,
மூலைதோரும் முட்டிக்கொண்டு…
அவரவர் வசதிக்கேற்ப
ஆஜானுபாகுவாய் ஆதி முதலவன்…
தனது பிறந்த நாளுக்காக
புதிதாய் வந்து ப்பர்கும் இடமெல்லாம்
ஓய்யாரமாய் அமர்ந்திருக்கிறார்
எங்கள் பிள்ளையார் !
பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்.
கல் பிள்ளையாரைப்போல
நீண்டநாள் வாழ்வு இல்லை என்றாலும்…
இருக்கும் கொஞ்ச நாட்களும்
கொண்டாட்டம்தான் இவருக்கு…
தெருவையே வளைத்து
ஆடும்வரை ஆடி…
ஊர்வல நாளன்று வீதிகளை எல்லாம் பாடி…
கூச்சலிட்டு…கோலாகலமிட்டு...
வீட்டுக்கு வீடு வசூலித்த
அத்தனை காசுபணத்தையும்…
அத்தனை ஆடம்பர செலவுகளையும் தாங்கி…
கடைசியில் ஒன்றுமே இல்லாமல்
கரைந்துபோக மனமின்றி, கரைந்துபோகிறார் எங்கள் பிள்ளையார் !
அருகிலிருப்பவரை அன்போடு அணைத்தால்,
ஆண்டவனும் அருகில் இருப்பான் எனும்
அன்னையின் வாகிற்கேற்ப...
கிணறுகளிலும் குளங்களிலும்
குட்டைகளிலும் நதிகளிலும்
கடல்களிலும்…
ஏற்கனவே பலநூறு விநாயகர் சிலைகள்
கரைந்தும் கரையாமல்
முட்டி மோதிக்கொண்டு...
முட்டி மோதிக்கொண்டு வருகிறது எம் இமைகளில்.
ஆண்டவனுக்கு கொடுப்போம்...
அன்பாக கொடுப்போம்
அநாதை ஆசிரமங்களுக்கும்
ஆதரவற்றவர்களுக்கும்…கொடுப்போம்...
அவரும் மகிழ்வர், அவனும் மகிழ்வான்.
அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல் வாழ்த்துக்கள்.
என் முழு முதலோன் ஆசிகளுடன்...
எம் உள்ளக்கிடக்கை விளக்க...
மண்ணில் பிறக்கும் நீ இந்த மண்ணுக்கே சொந்தமாவாய் என கடலில் கரையும் கணேசரின் விருப்பமும் இதுவே...
அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்!




